போலீஸ் நிலைய கதைக்களம் கொண்ட ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’... மிரட்டலான டிரெய்லர் வெளியீடு !

Maruthi Nagar Police Station Trailer

வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

காவல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் கதைக்களத்தை கொண்டது ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’. இந்த படத்தில் ஆரவ் மற்றும் வரலட்சுமி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘கொன்றால் பாவம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தயாள் பத்மநாபன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Maruthi Nagar Police Station Trailer

இவர்களுடன் சந்தோஷ் பிரதான், மகத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தள்ளனர். இப்படம் வரும் மே 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Maruthi Nagar Police Station Trailer

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் நிலைய பின்னணியில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story