‘இந்தியன் 2’ படத்தில் கேமியோ ரோல் செய்யும் மாஸ் ஹீரோ – வெளியான சீக்ரெட் தகவல்.

photo

கமல் ஹாசன் நடிப்பில், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘இந்தியன் 2’. பல கட்டங்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள இந்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் கேமியோ ரோலில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

photo

லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘இந்தியன் 2’ கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து சுமார் 21ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். பல தடைகளை கடந்து ரிலீசுக்கு தயாராகிவரும் இந்த படத்தின் மூலமாக புதிய தொழில் நுட்பங்களை களமிறக்க உள்ளார் ஷங்கர். தொடர்ந்து படத்தில் கேமியோ ரோலில் மாஸ் ஹீரோ ஒருவர் நடித்துள்ளாராம். இது வரை ரசியமாக காக்கப்பட்டுவந்த அந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த நடிகர் யாரென்றால் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வரும் ராம் சரண் தான் அவர்.

photo

Share this story