`மாஸ் ஜாதரா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்...!

ravi teja

ரவி தேஜா நடித்துள்ள `மாஸ் ஜாதரா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. இவரை ரசிகர்கள் அன்போடு மாஸ் மகாராஜா என அழைப்பர். ரவி தேஜா அடுத்ததாக நடித்து இருக்கும் மாஸ் ஜாதரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு அது மக்களின் கவனத்தை பெற்றது.
டீசர் காட்சியில் மிகவும் ஸ்டைலாகவும், மாஸாகவும் இருக்கிறார் ரவி தேஜா. படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான பானு போகவரபு இயக்கியுள்ளார். படத்தின் இசையை பீம்ஸ் செசிரொலியோ மேற்கொண்டுள்ளார். திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் மற்றும் ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விது அய்யனா ஒளிப்பதிவை மேற்கொள்ள நவின் நூலி படத்தொகுப்பை செய்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான து மேரா லவ்வர் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீலீலா கவர்ச்சி நிறைந்த ஆடையில் நடனமாடியுள்ளார். முழு பாடலின் வீடியோ வரும் 14 ஆம் தேதி வெளியிடவுள்ளது.
 

Share this story