‘மாஸ்டர்’ மகேந்திரன் படத்தில் பாடல் பாடிய ‘தேனிசை தென்றல்’ தேவா.. அமிகோ கேரேஜ் புதிய அப்டேட்
மாஸ்டர் மகேந்திரனின் ‘அமிகோ கேரேஜ்’ படத்தில் தேனிசை தென்றல் தேவா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு பிரபலமான இவர், தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார்.

மகேந்திரன் தற்போது ஜானகிராமன் நேசமணி இயக்கத்தில் ‘அறிண்டம்’ படத்திலும், மணிகண்டன் தலக்குட்டி இயக்கத்தில் ‘அர்த்தம்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் ‘அமிகோ கேரேஜ்’ படத்தில் நடித்து வந்தார். பிப்புள் பிரொக்ஷன் ஹவுஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்படிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான தேனிசை தென்றல் தேவா, ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது குறித்து தேவாவுடன் மகேந்திரன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். தேவா இந்த படத்தில் பாடியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதற்கிடையே மாஸ்டர் மகேந்திரன் ‘கரா’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

