5 மொழிகளில் வெளியாகும் ‘நீலகண்டா’.. மாஸ்டர் மகேந்திரன் போஸ்டர் வெளியீடு !

Nilakanta

மாஸ்டர் மகேந்திரனின் ‘நீலகண்டா’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

90-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருபவர் மகேந்திரன்.  இவர், ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்’ படத்தில் சிறு வயது பவானியாக நடித்து பிரபலமானார். 

Nilakanta

இந்த படத்திற்கு கதாநாயகனாக அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ‘அறிண்டம்’, ‘அர்த்தம்’. ‘கரா’, ‘அமிகோ கேரேஜ்’, ‘ரப்பப்பரி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படமாக உருவாகி வருகிறது ‘நீலகண்டா’. 

இந்த படத்தை ராகேஷ் மாதவன் என்பவர் இயக்கி வருகிறார். எல்.எஸ்.புரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிரசாந்த் பிஜி இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story