மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் ‘ரிப்பப்பரி’.. டீசர் வெளியீடு !

‘மாஸ்டர்’ படத்தில் சின்ன பவானி கதாபாத்திரத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ரிப்பப்பரி’. இந்த படத்தை ஏகே என்பவர் இயக்கியுள்ளார். .
இந்த படத்தின் கதாநாயகியாக சீரியல் நடிகை காவ்யா மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏகே டால்லஸ்ட் மேன் நிறுவனம் சார்பில் அருண் கார்த்திக் தயாரித்து வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The official teaser of #MasterMahendran's #Ripupbury is definitely raising the expectations of the film. April 14th release.https://t.co/X4UdqiM3Ir@Dir_ArunKarthik @Actor_Mahendran @kaavya_arivu23 @ActorSrini @maariactor @Noblekjames2 @saregamasouth @AKtheTalesman… pic.twitter.com/3sfHvDOUAZ
— Kollywood V2Cinemas ? (@V2Cinemas) April 1, 2023