“மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங்”- ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர்.

photos

விஜய்யின்மாஸ்டர்திரைப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

photos

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த  திரைப்படம்மாஸ்டர்’.இந்த திரைப்படம் ஜப்பானில்  வெளியாக உள்ள நிலையில், அதற்கான டீசர் ஜப்பான் மொழியின் சப் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

photos

 பொதுவாகவே இந்தியாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட தெலுங்கிலிருந்து ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘மாஸ்டர்விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ளது.

 “மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங்என்று தலைப்பு மாற்றப்பட்ட இப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தை தொடர்ந்து இனி விஜய்யின் படங்கள் தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட பல  மொழியில் வெளியாகும் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this story