“ஒரு நீள் இரவின் யுத்தம்”..‘மத்தகம்’ வெப் தொடரின் மிரட்டலான டிரெய்லர் !

அதர்வா - மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
முதல்முறையாக அதர்வா மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. இந்த வெப் தொடரில் நடிகர் அதர்வா போலீசாகவும், மணிகண்டன் வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து சுவாரஸ்யமாக இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. ஒரு இரவில் கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் இந்த படம். இந்த வெப் தொடரை பிரசாத் முருகேசன் என்பவர் இயக்கியுள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த வெப் தொடருக்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடித்தளத்தில் ஒளிப்பரப்பாக உள்ளது. இதையொட்டி இந்த வெப் தொடரின் மிரட்டலான டிரெய்லர் வெளியிட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஒரு நீள் இரவின் யுத்தம்! #Mathagam Trailer out Now#HotstarSpecials Mathagam will be streaming from August 18th on #Disneyplushotstar#TheNightisLong #MathagamOnHotstar @Atharvaamurali @manikabali87 @nikhilavimal1 @DhivyaDharshini @menongautham pic.twitter.com/oe7P1ddi5Z
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) August 5, 2023