ஹீரோவாகும் பிரபல யூடியூபர்.. இயக்குனர் யார் தெரியுமா ?

mathan gowri

 பிரபல யூடியூபரான மதன் கௌரி புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக இருப்பவர் நந்தா பெரியசாமி. ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். 

mathan gowri

இதையடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் மதன் கௌரி கதாநாயகனாக நடிக்கிறார். ‘தேடி தேடி பாத்தேன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். 

mathan gowri

இந்த படத்தில் ஸ்ரீரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். தாரன்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story