வெங்கட் செங்குட்டுவன் நடிப்பில் ‘மதிமாறன்’ டிரைலர் இதோ!
1703174857795
நடிகர் வெங்கட் செங்குட்டுவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மதிமாறன்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநரான மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் நடிகர்களான வெங்கட் செங்குட்டுவன் மற்றும் இவானா முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மதிமாறன்’. ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் பாபு படத்தை தயாரித்துள்ளார். மாறுபட்ட கதைகளத்தில் படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரில் ஓநாய், மான், எலி என கதையை விளக்குகின்றனர். டிரைலரே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்கிறது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.