சின்னத்திரையில் நடிக்கும் மயில்சாமி மகன்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மயில்சாமி. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தன் தந்தையை போலவே நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டனர். மூத்த மகன் அன்பு கோரிப்பாளையம் பட இயக்குநர் ராசு மதுரன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பார்த்தோம் பழகினோம் என்ற படத்தில் நடித்தார். ஆனால், இந்த படம் இதுவரைவெளியாக வில்லை. இதேபோல, இவர் நடித்த அந்த 60 நாட்கள் என்ற படமும் வெளியாகாமல் போனது. இதுமட்டுமல்லாது, ‘பொம்மலாட்டம் நடக்குது’, ‘திரிபுரம்’ ஆகிய படங்களும் பாதியிலேயே நின்றன.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தங்கமகன் என்ற புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நம்ம வீட்டுப் பொண்ணு சீரியல் கதாநாயகி அஸ்வினி ஜோடியாக நடிக்க உள்ளார்.