’ மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் மர்மமும் உணர்ச்சிகளும் இணைந்திருக்கும் : இயக்குநர் விஜய் மில்டன்!

Vijay milton

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் முக்கியத்துவம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

தலைப்பு கதைக்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. படம் இன்னும் வெளியாகாததால் நிறைய விஷயங்களை என்னால் இப்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மர்மமும் உணர்ச்சிகளும் இருக்கும் என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும். அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு சிறப்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளனர். விஜய் ஆண்டனி எப்போதும் இயக்குநர்களின் நடிகர். இந்தப் படம் அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை மெருகேற்றி உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்றார். 

Vijay anthony
இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்சயா,முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன், ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார் மற்றும் விஜய் ஆண்டனி, கே.எல். பிரவீன் எடிட்டராகவும், கலை இயக்குநராக ஆறுசாமியும் பணியாற்றியுள்ளனர்
 
 

Share this story