‘மெடிக்கல் மிராக்கல்’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

photo

காமெடியன் மற்றும் ஹீரோ என எல்லா பக்கமும் ஒரு கலக்கு கலக்கி வரும்  யோகிபாபு, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, ஜான்சன் கே இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

ஏ1 பிரொடக்ஷன் தயாரிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ படத்தில் நடிகர் யோகிபாபு டாக்ஸி ஓட்டுநராக நடித்துள்ளார், கதாநாயகியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து நடிகர் மன்சூர் அலிகான், கல்கி, மதுரை முத்து, தங்கதுரை, நாஞ்சில் சம்பத், பாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணிகண்ட் ராஜா ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் என்பவர் இசையமைத்துள்ளார்.

photo

காமெடி ரொமான்ஸ் ஜானரில் தயாராகியுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் யோகிபாபுவை சுற்றி முதலுதவி பெட்டி, கடிகாரம், கத்தி, கல், காலண்டர், கத்தரிகோல், ஊசி ஆகியவை உள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

photo

Share this story