இமயம் சரிந்தது: மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

photo

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71.

photo

கடந்த சில ஆண்டுகளாகவே உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார் விஜயகாந்த். இந்த நிலையில் கடந்த மாதம் காய்ச்சல் மற்றும் மார்பு சளி காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்ட தட்ட 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை எடுத்து பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலன் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வந்த தேமுதிக கழக அறிவிப்பில் “கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக” அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

photo

இந்த நிலையில் எப்படியும் கேப்டன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த அவரது தொண்டர்களுக்கு பேரிடியாக வந்தது இன்று வெளியான மருத்துவமனை அறிவிப்பு அதன்படி “ கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அலற்சி காரணமாக வெண்டிலேட்டர் சிகிச்சை பெற்றிருந்தார். மருத்துவர்களின் கடின முயற்சி இருந்தும் இன்று காலை 28 டிசம்பர் 2023 காலமானார் “ என அறிவிப்பு வெளியானது. கேப்டனின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  

Share this story