தொடர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா...!

Meena


ஏராளமான படங்கள் நடித்து 90-ல் ஃபேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அவரை ஒரு கனவுக்கன்னியாக மாற்றியது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை நடிகை மீனாவை சேரும்.இதை தொடர்ந்து, நடிகை மீனா பல நடிகருடன் நடித்திருக்கிறார். ஆனால் ரஜினியுடன் இவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முத்து, எஜமான், வீரா ஆகிய படங்கள் மெகா ஹிட் கொடுத்தது. முக்கியமாக முத்து திரைப்படம் இந்தியா மட்டுமின்றி ஜப்பானிலும் மாபெரும் ஹிட் அடித்தது.அதன் பிறகு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கல்யாணத்துக்கு பிறகு மீனா சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனால் தன் மகள் நைனிகாவை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார்.

Meena அது மீனாவை மிகவும் பாதித்தது. அதில் இருந்து வெளியே வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரை பற்றி வதந்திகள் பரவி வருகின்றது. அவரையும், அரசியல் பிரமுகர் ஒருவரையும் இணைத்து கிசுகிசு பேசப்பட்டது. இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ஒரு நிலையான உள் போராட்டத்தை அனுபவித்துவருகிறேன். மிகவும் வலியை உணர்கிறேன். ஆனால் நீங்கள் என்னை பார்க்கும்போது நன்றாக இருப்பது போல் தோன்றும். முகமூடியின் பின்னால் மறைத்து வைத்திருக்கிறேன். வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

Share this story