40 ஆண்டுகள் திரைப்பயணத்தில் ‘விஜய்’யுடன் மட்டும் ஜோடி சேராத ‘மீனா’ - என்ன காரணம் தெரியுமா!

photo

90’ஸ் கிட்ஸ்களின் கனவுகன்னியாக வலம் வந்த மீனா, திரைத்துறையில் 40 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் போனி கபூர், கலைப்புலி எஸ். தாணு, ராஜ்கிரண், குஷ்பு, இசை அமைப்பாளர் தேவா, நாசர், பிரபுதேவா, ஸ்னேகா, ரோஜா, சுஹாசினி, ராதிகா, ப்ரீத்தா ஹரி, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

photo

கமல், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், அஜித், பார்த்திபன், முரளி என பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ள மீனா, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் அதில்,  இதுவரை விஜய்யுடன் ஜோடியாக நடிக்காத போது, அவருடன் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடியது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

photo

அதற்கு சிரித்தபடியே பதில் கூறிய மீனாஅந்த பாட்டுக்கு எப்படி ஆட வேண்டும் என முதலில் எனக்கு தெரியாது. ஆனால், பின்னர் விஜய்யுடன் போட்டிப் போட்டு நடனமாடினேன். ரொம்ப ரஸ்க் எடுத்து ஆடினேன். பிரியமுடன், பிரண்ட்ஸ் இந்த இரண்டு படங்களிலும் என்னை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால் நான் பிசியாக இருந்ததால், கால்ஷீட் பிரச்சனையால் விஜய்யுடன் நடிக்கமுடியாமல் போனது” என மீனா கூறியுள்ளார்.

Share this story