குஷ்பு சுந்தர் தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படம் -எப்போது ரிலீஸ் தெரியுமா ?
1785551414000
அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர், பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ். அருண்குமார் தயாரித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம், வரும் செப்டம்பர் 25ம் தேதி ரிலீசாகிறது. ‘மீசைய முறுக்கு 2’ படம் குறித்து ஆதியின் பதிவில், ‘‘இது வெறும் ஒரு கனவாகத் தொடங்கியது.
ஆனால் இன்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வாக மாறியுள்ளது’’ என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்களை ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா ஆகியோர் இப்படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்..

