மேகா ஆகாஷ் திருமணம்.. நேரில் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து

megha akash

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


 

Share this story