சந்தானத்திற்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்... ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செம்ம அப்டேட் !

VadakkupattiRamasamy

சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் கதாநாயகி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘கிக்’ படத்திற்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தை ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

VadakkupattiRamasamy

இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். நகைச்சுவை ஜாம்பவான்கள் கவுண்டமணி - செந்திலின் புகழ்பெற்ற காமெடியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற வித்தியாசமான பெயரில் இந்த படம் உருவாகுவதால் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகிறது என தெரிகிறது. 

VadakkupattiRamasamy

 இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தனுஷூடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’,  சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, அதர்வாவுடன் ‘பூமாராங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

Share this story