8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ் !

megna

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர், மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர் தாய்மை அடைந்திருந்தபோது, 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது திரையுலகில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள மேக்னா ராஜ், 8 வருடங்களுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார். சுரேஷ் கோபி நடிக்கும் அரசியல் படத்தில் மேக்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.megna


இதுபற்றி அவர் கூறும்போது, “பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறேன். எனக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். உண்மையிலேயே வீட்டுக்குத் திரும்பியது போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story