சூர்யா தயாரிப்பில் கார்த்தி-அரவிந்த்சாமி நடிக்கும் ’மெய்யழகன்’
கார்த்தி, அரவிந்த் சுவாமி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மெய்யழகன்' என பெயரிடப்பட்டுள்ளது.
ஜோதிகா - சூர்யா தயாரிப்பில், ‘96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் அவரது 27வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த கதாபாத்திரம் கார்த்தியின் ஹீரோயிசத்திற்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது. முதல்முறையாக கார்த்தியுடன் அரவிந்தசாமி நடிக்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சத்யம் சூரியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.
.@Karthi_Offl Happy bday! Always love it when you give back to make good cinema!! #Meiyazhagan #மெய்யழகன் pic.twitter.com/wkbxMKKda9
— Suriya Sivakumar (@Suriya_offl) May 24, 2024
அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்டுவது போலவும், கார்த்தி அவருக்கு பின்னால் அமர்ந்திருப்பது போலவும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்திருந்தது. அதன்பின் நடிகர் சூர்யா வெளியிட்ட போஸ்டரில் கார்த்தி காளை மாடுடன் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.