மெரி கிறிஸ்துமஸ் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்

மெரி கிறிஸ்துமஸ் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது.  அதன் பின்னர் டிசம்பர் 15, டிசம்பர் 8 என மாற்றப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகி உள்ளது. 

மெரி கிறிஸ்துமஸ் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்

படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதே சமயம் படக்குழுவினர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடி தீர்த்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன
 

Share this story