'மெய்யழகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்

meyyazhagan
நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மெய்யழகன் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31ம் தேதி கோயமுத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவும் நிகழ்வில் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Share this story