‘அனைவரையும் திருப்திபடுத்தகூடிய படைப்பு ஒன்று இல்லை” – ‘மைக்கேல்’ பட இயக்குநரின் இதயப்பூர்வமான பதிவு.

இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரன்சி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. இந்த படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன், வரலெட்சுமி சரத்குமார் அகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் திவ்யான்ஷா கௌஷிக், வருண் சந்தீஷ், அனுசிய பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
சாம் சி எஸ் இசையில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு கிரன் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துல்ளார். திருப்பூரனேனி கல்யாண் சக்ரவர்த்தி, ராஜன் ராதமணாளன் மற்றும் ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தற்போது படத்தின் இயக்குநரான ரஞ்சித் ஜெயகொடி இதயபூர்வமான கருத்தை பகிர்ந்துள்ளார்.
ரஞ்சித் ஜெயகொடி கூறியதாவது “ எனது எல்லா படைப்புகளை போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கு என் 100% உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும். மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக.. ஆகப்பெரும் வாஞ்சையுடன்-ரஞ்ஜித் ஜெயக்கொடி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி ♥️ Thankyou ♥️ #Michael 👊🏽 pic.twitter.com/457YszcZPm
— 𝐑𝐚𝐧𝐣𝐢𝐭 𝐉𝐞𝐲𝐚𝐤𝐨𝐝𝐢 (@jeranjit) February 6, 2023