ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் அழகிய ட்ரைலர்..
1721815643662
பூவரசம் பீபீ , ஏலே,சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயக்கி மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். தற்போது அவர் இயக்கி வரும் படம்தான் மின்மினி. இப்படத்திற்கு இசைப்புயல் ஏர்.ஆர்.ரகுமானின் மகளும் பின்னணிப்பாடகியுமான கதீஜா ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார்.எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆன நிலையில், படம் இன்னும் முடிவடையாமல் இருப்பதற்கு ஒரு பிரத்யேக காரணம் உள்ளதாக கூறப்படுகிறது .இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், வளரும் வரை 7 வருடங்கள் காத்திருந்து தற்போது படப்பிடிப்பு நடந்துள்ளது.
இந்நிலையில், மின்மினி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.