‘நான், காபி, ஜோ மேம்……’ மிர்ச்சி செந்திலின் செம கியூட் பதிவு.

photo

மிர்ச்சி செந்தில், நடிகை ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அழகான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

photo

சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக பிரபலமனர் செந்தில். அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி கதாப்பாத்திரத்தில் நடித்த ஸ்ரீஜா என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து சின்னத்திரை, வெள்ளித்திரை, விளம்பரங்கள் என தனது கவனத்தை செலுத்தி வரும் செந்தில் தற்போது அண்ணன்- தங்கை பாசத்தை மைய்யமாக வைத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘அண்ணா’ சீரியலில் நடித்து வருகிறார்.

photo

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஜோதிகாவுடன் பிஸ்கட் விளம்பரத்துக்காக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்ததை பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நடித்த ஜோ, செந்தில், இயக்குநர் கிருஷ்ணா மூவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாளாம்.

Share this story