"ஜாலியான படங்களையும் ராம் சார் இயக்க வேண்டும்"-பறந்து போ பட விழாவில் மிர்ச்சி சிவா

siva
இயக்குனர் ராம் கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர்  . இவர் தற்போது 'பறந்து போ' என்ற என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் சாதனை பெற்று வருகிறது 
இதையொட்டி படத்தின் நன்றி அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. 
இந்த விழாவில் பேசிய நடிகர் சிவா, “மனதார அனைவருக்கும் நன்றி. திருநெல்வேலி, மதுரை, சேலம் எனப் பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் போய்க் கொண்டிருக்கிறோம். கிரேஸ் கண்கலங்கியதைப் பார்த்து எனக்கும் எமோஷனல் ஆகிவிட்டது. குறுகிய காலத்தில் எங்களுக்கு அருமையான இசை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் தயாநிதி. யுவன் இசை படத்திற்கு இல்லையே என்ற குறை எங்கேயும் தெரியாமல் வைத்திருந்தார் சந்தோஷ். ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார். ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம். வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்

Share this story