மிர்ச்சி சிவா நடித்துள்ள 'சுமோ' படத்தின் பாடல்கள் வெளியீடு...!

sumo

மிர்ச்சி சிவா நடித்துள்ள சுமோ படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது. 

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் ‘சுமோ’ என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப்போனது.


வேல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள சுமோ படம் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் அனைத்து பாடல்கள் அடங்கிய ஆல்பம்-ஐ படக்குழு வெளியிட்டுள்ளது.  

Share this story