சூது கவ்வும் 2 படத்தில் நடிக்கும் மிர்ச்சி சிவா

வருகிறது சூதுகவ்வும் 2... படத்தின் ஹீரோ இவரா?

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூது கவ்வும்’. பிரபல இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு ‘மிக நேர்மையாக, ஆட்களைக் கடத்தும் கதை, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே… படத்தின் முழுகதை. வசனங்களும் திரைக்கதையும் ஒரு சாதாரண கதையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற படம். இப்படி பெரிய பில்டப் கொடுத்து கதையை சொன்னாலும், அது காமெடிப்படம். முதலில் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு இல்லாமலும், பின்பு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ‘சூது கவ்வும் 2’ படத்தை இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி வருகிறார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.  இவர்களுடன் காளி வெங்கட், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்

வருகிறது சூதுகவ்வும் 2... படத்தின் ஹீரோ இவரா?

படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். படப்பிடிப்பு புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது. 

Share this story