பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணையும் மிர்ணாள் தாகூர்...!
பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சுமார் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து நடிகர் பிரபாஸ், தி ராஜாசாப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சலார் 2 போன்ற பட படங்களில் கமிட்டாகி இருக்கிறார் பிரபாஸ். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் பிரபாஸ், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. பிரபாஸின் 25 ஆவது படமான இந்த படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். அவருடன் இணைந்து சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படம் 2026 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 8 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்ற மிர்ணாள் தாகூர், ஸ்பிரெட் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.