மிரட்டலான ஜாம்பி : மிருதன் 2 பட வேலைகளை தொடங்கிய இயக்குநர்..!

Miruthan 2

நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்தடுத்து பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன் 2 படத்தில் ஜெயம் ரவி இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ஜெயம் ரவி, லக்ஷ்மி மேனன், அனேகா சுரேந்திரன், காளி வெங்கட், ஆர்என்ஆர் மனோகர், ஸ்ரீமன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் மிருதன். தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் ஜாம்பி கதைக்களத்தில் வெளியான படம் மிருதன். ஹாலிவுட்டில் ஜாம்பி கதைகள் வெளியான நிலையில் இந்தியாவில் இந்தப் படம் முதல் முயற்சியாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் காவல் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மிருதன் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தையும் சக்தி சௌந்தர்ராஜனே இயக்க உள்ளதாகவும் ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாகவும் கூறப்படும் சூழலில் முன்னணி நடிகர்களை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிப்பாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவர் படங்களில் அதிகமாக நடிக்காத நிலையில் வேறு ஒரு நடிகை இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை சக்தி சௌந்தரராஜன் துவங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில் இந்த படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் ஜாம்பி கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Share this story