தமிழ் சினிமா பற்றி மன வேதனையடைந்த மிஷ்கின் -என்ன சொன்னார் தெரியுமா ?

miskin with vijay sethupathi
இயக்குனர் மிஷ்கின் கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் மட்டுமல்ல ஒரு நடிகரும் கூட .இவர் நடித்த ட்ராகன் மற்றும் மாவீரன் போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன .இவர் தமிழ் சினிமா பற்றி பேசிய பேச்சு பற்றி நாம் காணலாம் 
இயக்குனர் வெற்றிமாறன் வழங்க, இளையராஜா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ள படம், ‘மைலாஞ்சி’. அஜயன் பாலா எழுதி இயக்க, அஜய் அர்ஜூன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜூன் தயாரித்துள்ளார். ‘கன்னி மாடம்’ ராம் கார்த்திக், க்ரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அகிலா பாலுமகேந்திரா, கங்கை அமரன், சீமான், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஏ.எல்.விஜய், மீரா கதிரவன், தனஞ்செயன், ஏடிஜிபி தினகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது மிஷ்கின் பேசியதாவது: 365 படங்கள் உருவான தமிழ் சினிமாவில், தற்போது 35 படங்கள்தான் உருவாகின்றன‌.‌ அதில் 5 படங்கள் தான் வெற்றிபெறுகிறது. சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்கள், தொடர்ந்து 3 படங்களையாவது உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வரவேண்டும். முதல் படம், அனுபவம். 2வது படம், எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது. 3வது படத்தில் பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்து, வெற்றிகரமான படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள்.

Share this story