"நமக்கு காதுகள் இருப்பது, இளையராஜாவின் இசையை கேட்க."-இயக்குனர் மிஷ்கின்

miskin with vijay sethupathi

இளையராஜா இசை அமைக்க, கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கிய ‘டோரதி’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வெற்றிவிழாவில் இயக்குனர்கள் வசந்தபாலன், சசி, லிங்குசாமி ஆகியோர் பேசினர். மிஷ்கின் பேசும்போது, ‘இப்படத்தின் மூலம் திருநர் சமூகத்தை மிகவும் உயர்ந்த இடத்துக்கு கார்த்திக் சுப்பராஜ் எடுத்துச் சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை ‘டோரதி’ மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். இது வசூலை தாண்டி, மிகச்சிறந்த படமாக காலம் கடந்தும் நிற்கும்.

இளையராஜாவை தொடர்ந்து நான் கார்த்திக் சுப்பராஜ் காலில்தான் விழ வேண்டும். எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள், திருநங்கைகள். இப்படம் சகிப்புத்தன்மை குறித்து அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறது. காதுகள் இருப்பது, இளையராஜாவின் இசையை கேட்க. கண்கள் இருப்பது, ‘டோரதி’ போன்ற படங்களை பார்க்க. தமிழில் வெளியான ‘கடைசி விவசாயி’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களை விட 100 மடங்கு சிறப்பான படம் ‘டோரதி’. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ்தான் இப்படத்தின் உயிர்’ என்றார்.

Share this story