முன்னாள்‌ உலக அழகிக்கு மாரடைப்பு... அதிர்ச்சியில் ரசிகர்கள் !

sushmita sen

முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்தியா சார்பில் முதன் முதலாக ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்ற பெருமைக்குரிய சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜுனாவுடன் ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நாயகியாகவும், ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். தற்போது 43வயதாகும் நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

sushmita sen

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை நடிகை சுஷ்மிதா சென் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும், பலமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். அது மிகவும் தேவைப்படும் நேரத்தில் உதவும் என்று எனது தந்தை கூறியிருந்தார். 

எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. எனக்கு பலமான இதயம் இருப்பதாக எனது மருத்துவர் தெரிவித்துள்ளார். எனக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது உதவிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story