மிஸ் யூ ஆல்.... மீரா எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது

மிஸ் யூ ஆல்.... தற்கொலை செய்து கொண்ட மீரா எழுதிய கடிதம் கிடைத்தது...

தூக்கிட்டு தற்கொலை செய்து விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா, இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 12-ம் வகுப்பு படிக்கும் அவர் கடந்த சில நாட்களுக்கு கடுமையான மன உளைச்சளில் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இச்செய்தி தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் நேரில் சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதலப்பக்கங்களிலும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடிதத்தில் 'Love you all… Miss you all என தொடங்கி 10 வரிகளில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாக காவல்துறையினர் கூறி உள்ளனர். தானும் தனது குடும்பம் இல்லாமல் தவித்துப் போவேன், தனது குடும்பமும் தான் இல்லாமல் தவித்துப்போகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share this story