அருண் விஜய்யின் “மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே” படத்தின் டிரைலர் இதோ!......
1704508244000
அருண் விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ இந்த படத்தில் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகிவரும் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்த படத்தின் அசத்தல் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.