ஆறு இயக்குநர்களின் ‘மார்டன் லவ்- சென்னை’ ரிலீஸ் எப்போது தெரியுமா?

photo

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஆந்தலஜி வெப் தொடரான மாடர்ன் லவ்தொடரின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

photo

டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரிப்பில்  பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்பாக வெளியாகவுள்ள அந்தலஜி தொடர் தான்  ‘மார்டன் லவ்- சென்னை’.  இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கர்  பாடல் வரிகள் எழுதிய இந்த தொடருக்கு, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.  முதல் அத்தியாயம்- ‘லாலாகுண்டா பொம்மைகள்’ - இதனை ராஜு முருகன் இயக்கியுள்ளார்இரண்டாம் அத்தியாயம்- ‘இமைகள்’ - பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார்மூன்றாவது அத்தியாயம்- ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி’ - கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நான்காவது அத்தியாயம்- ‘மார்கழி’ - இதனை அக்ஷய் சுந்தர் இயக்கியுள்ளார்ஐந்தாவது அத்தியாயம்- ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ - பாரதிராஜா இயக்கியுள்ளார்.  ஆறாவது அத்தியாயம்-‘நினைவோ ஒரு பறவை’ - இதனை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறதுஇதனை தொடர்ந்து ரசிகர்கள் இத்தொடரை காண ஆர்வமாக காத்துள்ளனர்.

Share this story