“என் காதலிகளை இன்றைக்கும் மறக்க முடியவில்லை” - இயக்குனர் பாரதிராஜா !

modernlove

 எனது காதலிகளை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை என்று இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார். 

நவீனயுக காதல் கதைகளை மையப்படுத்து எடுக்கப்பட்டுள்ள ஆந்தாலஜி வெப் தொடர் ‘மார்ன் லவ்’ சென்னை. இந்த வெப் தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இன்று டிரெய்லர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டில் இயக்குனர்கள் பாரதிராஜா, தியாகராஜா குமாரராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

modernlove

இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்த வெப் தொடரை இயக்கியதன் மூலம் தியாகராஜா குமாரராஜா என்ற நல்ல நண்பன் கிடைத்துள்ளார். என்னை பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. நான் 9வது வகுப்பு படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இருந்தான். அதன்பிறகு சென்னை வந்துவிட்டேன் என்றார். 

மேலும் பேசிய அவர், எனது வாழ் நாளில் இதுவரை 4 நான்கு காதல்களை கடந்து வந்துள்ளேன். ஆனால் அவர்களை என்னால் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. எனக்கு நிழல் தந்த குடைகள் அவர்கள். இறப்பதற்குள் இன்னும் சிறந்த படத்தை இயக்கவேண்டும் என்று மிகவும் உருக்கமாக தெரிவித்தார். 


 

Share this story