ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள் -எந்த படம் தெரியுமா ?

நடிகர் மோகன்லாலின் மகளும் இப்போது மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் .
நடிகர் மோகன்லால் தற்போது மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருகிறார். மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தன. லூசிஃபரின் தொடர்ச்சியாக, பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலின் 'எம்புரான்' திரைப்படம் மலையாள திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்தது. இதையடுத்து தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'துடரும்' திரைப்படம் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை படைத்தது.
இந்நிலையில் மோகன்லாலின் மகள் விஸ்மயா சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .அவர் , ‘துடக்கம்’ என்ற மலையாளப் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மோகன்லாலுக்கு பிரணவ் என்ற மகனும், விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரணவ், கடந்த 2018ல் ஆதி என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நாயகனாக அறிமுகமானார். இதன் பிறகு ‘ஹிருதயம்’, 21ம் நூற்றாண்டு, ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஆகிய படங்களிலும் இவர் நாயகனாக நடித்தார்.
இந்நிலையில் மோகன்லாலின் மகள் விஸ்மயாவும் சினிமாவுக்கு வருகிறார். பிரபல இயக்குனர் ஜூட் ஆண்டனி டைரக்ட் செய்யும் துடக்கம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகம் ஆகிறார். மோகன்லாலின் நெருங்கிய நண்பரான ஆண்டனி பெரும்பாவூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.