திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம் : வெளியான அப்டேட்
2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாஇ மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும். திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் மோகன் ஜி அடுத்து இயக்கும் படத்தை குறித்து மோகன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த ஆடி பெருக்கு நன்நாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகல் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் அவருடன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி இருக்கிறார். அடுத்து இயக்கும் படத்தில் இவர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி,திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு வெளியான சில நொடிகளில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஆடிபெருக்கு நன்னாளை முன்னிட்டு புதிய அலுவலக பூஜையுடன் அடுத்த திரைப்படத்திற்கான வேலைகள் துவங்கியது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.. எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்நோக்கி 🙏❤️ pic.twitter.com/d2JiZDhaU4
— Mohan G Kshatriyan (@mohandreamer) August 3, 2024