நடிகர் 'மோகன் ஷர்மா'வை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்.

photo

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான மோகன் ஷர்மாவை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

photo

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஹாரிங்டன் சாலையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் இவர் நேற்று முன்தினம் தி.நகர் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.  அப்போது  ஹாரிங்டன் சாலை பத்தாவது அவென்யூவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமானைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று போலீசில் இது குறித்து புகாரளித்துள்ளார்.

இந்த தாகுதலுக்கு காரணம் முன் விரோதம் என்று சொல்லப்படுகிறது. மோகன் ஷர்மாவுக்கும், இடைத்தரகர்கள் இருவருக்கும் வீடு விற்ற விஷயத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், இது குறித்து மோகன் போலீசில் எற்கனவே புகாரளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

Share this story