‘ஆவேஷம்’ பட இயக்குநரின் படத்தில் மோகன்லால்!
![mohanlal](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/419f65fad2e8176bab000923780f69f6.jpg)
‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதை மோகன்லால் உறுதி செய்திருக்கிறார்.மோகன்லால் இயக்கி, நடித்துள்ள படம் ‘பரோஸ் 3டி’. கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழுக்க, முழுக்க குழந்தைகளை கவரும் வகையில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. ‘பரோஸ்’ விளம்பர நிகழ்ச்சியை ஒட்டி மோகன்லால் அளித்த பேட்டியொன்றில், “பல்வேறு கதைகள் கேட்டு வருகிறேன்.அடுத்து ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இது மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தினை அளித்துள்ளது.
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜீத்து மாதவன். இதில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடைய இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவிருப்பது இப்போது பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது.