சலார் 2 படத்தில் மோகன் லால்!
1726053235727
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்த படம், ‘சலார்’. கடந்த வருடம் வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்தது. இதன் அடுத்த பாகமான, ‘சலார் பார்ட் 2: சவுகரியாங்கா பர்வம்’ உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இதிலும் நடிக்கிறார்கள்.
சலார் படத்தில் ரவி பஸ்ரூர் இசை அமைத்திருந்தார். 2-ம் பாகத்தில் அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மோகன் லால் நடிக்க இருக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.