மோகன் லால் - ஷோபனா நடித்துள்ள 'துடரும்' பட டிரெய்லர் ரிலீஸ்...!

mohanlal

மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்தபடமான 'துடரும்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், தனது 360-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, ’ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கிய இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கி உள்ளார். 

ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து ’அவிடத்தி போலே இவிடேயும்’ என்ற படத்தில் நடித்தார்கள். கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில், `துடரும்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.  

Share this story