மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்" ட்ரெய்லர் நாளை ரிலீஸ்...!

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கி உள்ள “எம்புரான்” திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
The #L2E #EMPURAAN trailer. 1:08 PM 20/03/25!
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) March 19, 2025
Stay tuned!
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #MuraliGopy @antonypbvr @aashirvadcine @GokulamGopalan @GokulamMovies #VCPraveen #BaijuGopalan #Krishnamoorthy @DreamBig_film_s @jsujithnair @imaxindia… pic.twitter.com/mGJw7nDzbo
இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஜதின் ராம்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்புரான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் நாளை பிற்பகல் 1.08 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். “எம்புரான்" படத்தின் ட்ரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதாக பிருத்விராஜ் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.