மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்திற்கு யு/ஏ சான்று

empuran

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்திற்கு யு/ஏ வழங்கப்பட்டுள்ளது. 

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ்,  சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

mohan lal
இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தணிக்கை குழு சார்பில் யு/ஏ சான்று  வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரன் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 
  

Share this story