மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் 'துடரும்' திரைப்படம் ஓடிடி ரிலீஸ்...!

mohanlal

நடிகர் மோகன்லால் நடித்த துடரும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.mohanlal

எம்புரான் படத்தைத் தொடர்ந்து இப்படமும் மோகன்லாலுக்கு ரூ.200 கோடி வசூல் படமாக அமைந்தது திரைத்துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் துடரும் திரைப்படம் இன்று அதிகாலை வெளியானது. மலையாளம் தவிர்த்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story