நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு புத்தகம்...!

mohanlal

நடிகர் மோகன்லாலின் வாழ்க்கை வரலாறு புத்தகம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நேற்று 65வது பிறந்த நாள். தொடர் வெற்றிகளையும், வசூலையும் குவித்து வரும் மோகன்லாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று மோகன்லால் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: எனது பிறந்தநாள் அன்று ஏற்பட்டுள்ள சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பானு பிரகாஷ் எழுதிய என் வாழ்க்கை பற்றிய கதை, 'முகரகம்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது.என் மதிப்புக்குரிய எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் முன்னுரை எழுதியுள்ளார். இப்புத்தகம் என் 47 வருட திரையுலக வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. என் வாழ்க்கை சம்பவங்களை வார்த்தைகளாக மாற்றி எழுதி மொழிபெயர்க்க பானு பிரகாஷ் மேற்கொண்ட முயற்சி பெரியது. வரும் டிசம்பர் 25ம் தேதி புத்தகம் வெளியாகிறது என தெரிவித்துள்ளார். 
 

Share this story