ரூ.100 கோடி வசூலில் இணைந்த மோகன்லாலின் `துடரும்'...!

mohanlal

மோகன்லால் நடித்துள்ள ‘துடரும்’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மோகன்லால் நடித்துள்ள ‘துடரும்’ படத்தில்  20 வருடங்களுக்கு பிறகு ஷோபனா மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள். துடரும் திரைப்படத்தை தருன் மூர்த்தி இயக்கியுள்ளார்.தரூண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். கடந்த 25ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


 மோகன்லால் கடந்த சில ஆண்டுகளில் வெளியான மலைக்கோட்டை வாலிபன், பரோஸ், எம்புரான் ஆகிய திரைப்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் துடரும் படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் என கூறலாம். இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.  தற்போது திரைப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் கொண்டாட்டம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 


 

Share this story