ரூ.200 கோடி வசூலை அள்ளிய மோகன்லாலின் ‘துடரும்’

mohanlal

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘துடரும்’ படம் ரூ.200 கோடி வசூலை அள்ளியுள்ளது. 

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் இப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், இப்படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது.தற்போது வரை  200 கோடி வசூலை இப்படம் அள்ளியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தின் வெற்றியை தொடர்ந்து ‘துடரும்’ திரைப்படம் தமிழில் தொடரும் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 



 

2025-ம் ஆண்டு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இரண்டு இடங்களை மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகியவை பிடித்திருக்கிறது. இந்திப் படமான ‘சாவா’ படத்தின் வசூலை முறியடித்தது ‘துடரும்’. தொடர்ச்சியாக வசூலைக் குவித்து வருவதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 

Share this story